ஜனாதிபதி, அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர பாடுபட்டது பிழை என்றால் மன்னிப்பு கோர தயார் : விமல்

தனக்குப் பின்னால் வௌிநாட்டு புலனாய்வு சேவையுடன் தொடர்புடையவர்கள் இருந்தால் அது தொடர்பில் உடன் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

அப்படி யாரேனும் இருந்தால் பொலிஸ் மா அதிபர் ஊடாக குற்றச்சாட்டை சுமத்தியவரிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என நீர்கொழும்பில் வைத்து ஊடகங்களிடம் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி அரசியல் கட்சிகளுடன் தொடர்பில்லாமல் ஜனாதிபதி செயலகத்தில் மாத்திரம் இருப்பது கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் சரியில்லை என்பதால் அவருக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உயர் பதவி வழங்கப்பட வேண்டும் என யோசனை முன்வைத்ததாகவும் அதன்மூலம் மஹிந்த ராஜபக்ஷ அக்கற்றப்பட வேண்டும் என்ற அர்த்தம் உருவாக்கிக் கொள்ளக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சிகள் பற்றி பேசுவதற்கு உரிமை இருப்பதாகவும் அப்படி இன்றேல் ஐதேக, ஜேவிபி, ஆளும் சிறுகட்சிகள் பற்றி பேசவே முடியாது என விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவும் ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்யவும் முன்னின்று செயற்பட்டது தவறு என்றால் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயார் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply