இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்

death

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 09 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளது.

  1. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 95 வயதான ஆண் ஒரு வர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா கார ணமாக 2021 பெப்ரவரி 05 ஆம் திகதி வீட்டிலேயே உயிரிழந் துள்ளார்.
  2. அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து ஹோமாகம வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இதயம் செயலிழந்தமை காரணமாக 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  3. குருணாகல் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஆண் ஒரு வர் . குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ர வரி 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  4. நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவர் . வெலிசறை மார்புச் சிகிச்சை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுவாசத் தொகுதி செயலிழந்தமை மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 2021 பெப்ர வரி 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  5. கொழும்பு -12 பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் . கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் புற்றுநோய் காரணமாக 2021 பெப்ரவரி 07 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
  6. ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவர் . கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் போதான வைத்தி யசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் பக்கவாத காரணமாக 2021 பெப்ரவரி 07 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  7. ஹோரண பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் . மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத் தம் விஷ மானது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் நுரையீரல் புற்று நோய் காரணமாக 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  8. குருதெனிய பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரத் தம் விஷ மானது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் இரத்தம் விஷமானமை காரணமாக 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
  9. மாவனல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண் ஒருவர் . மாவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , கொவிட் -19 கொ ரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் மார டைப்பு காரணமாக 2021 பெப்ரவரி 08 ஆம் திகதி உயிரி ழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply