வடபகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி

காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன வடக்கின் பிரதான தொழில் மையங்களாக விளங்கின. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வடபகுதி மக்களின் அரசியல் தலைமையாக அங்கீகாரம் பெற்ற தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட ஒரு பிரிவினர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் சங்கமமாகியதன் விளைவாக வடபகுதி பெற்ற நன்மை என்று இம் மூன்று தொழிற்சாலைகளையும் குறிப்பிடலாம். தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் அன்றைய அரசாங்கத்தில் இணைந்ததால் முற்போக்கு சக்திகளுக்கும் உழைக்கும் வர்க்கத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவுக்கு மத்தியில் இம்மூன்று தொழிற்சாலைகளும் வடக்குக்குக் கிடைத்த வாய்ப்புகள் எனலாம்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் இத் தொழிற் சாலைகள் வடக்கில் நிறுவப்படுவதற்குக் கைத் தொழில் அமைச்சர் என்ற வகையில் காரணமாக இருந்தார். அதன்பின் வடக்கின் அபிவிருத்தியில் அன்றைய தமிழ்த் தலைவர்கள் கவனம் செலுத்தவில்லை.

இம்மூன்று தொழிற்சாலைகளும் வட பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கின. இத் தொழிற்சாலைகளில் ஏராளமானோர் வேலைவாய்ப்புப் பெற்றனர். பல குடும்பங்களில் அடுப்பு எரிவதற்கு இத் தொழிற்சாலைகள் காரணமாக இருந்தன. வடக்கின் அரசியல் களத்தில் புலிகளின் கை மேலோங்கியதைத் தொடர்ந்து இக் குடும்பங்களில் இருள் சூழத் தொடங்கியது.

மூன்று தொழிற்சாலைகளும் செயற்படுவ தற்குப் புலிகள் இடமளிக்கவில்லை. அவர் களின் அத்துமீறிய செயற்பாடுகள் காரணமாக இவை செயலிழந்தன. இதன் விளை வாகத் தொழிலளர்கள் வேலையிழந்தனர். உயர்மட்ட அலுவலர்கள் கொழும்பில் இத் தொழிற்சாலைகளின் தலைமைச் செயலகங் களில் சிலகாலம் பணி புரியும் வாய்ப்பை பெற்றபோதிலும் அது நீடிக்கவில்லை. பொதுவாக, இத்தொழிற்சாலைகளின் ஊழி யர்கள் வருமானத்தை முற்றாக இழந்தனர்.

இம்மூன்று தொழிற்சாலைகளையும் மீண் டும் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாக கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் குமார வெல்கம கூறியிருப்பது வட பகுதி மக்களுக்கு நிச்சயமாக இனி ப்பான செய்தியாகும். இத் தொழிற்சாலைகள் செயற்படத் தொடங்கியதும் ஏராளமானோர் வேலைவாய்ப்புப் பெறுவது நிச்சயம். முன்னைய ஊழியர்களில் முதுமை அடைந்தவர்களைத் தவிர ஏனையோர் தங்கள் பழைய தொழில்களைப் பெறுவதற்கான சாத்தியமும் உண்டு.

இம்மூன்று பிரதான தொழிற்சாலைகளுக்கு மேலதிகமாக, ஜப்பான் அரசாங்கத்தி னதும் இந்திய அரசாங்கத்தினதும் நிதியுத வியுடன் பொஸ்பேற் உற்பத்தித் தொழிற் சாலையும் மீன்பிடிப் படகு, மீன்பிடி வலைகள் உற்பத்தித் தொழிற்சாலையும் ஆரம்பிக் கப்படவிருப்பதாக அமைச்சர் வெல்கம கூறினார்.

அபிவிருத்தியுடன் வேலைவாய்ப்பு சம்பந் தப்பட்டுள்ளது. வடக்கில் இடம்பெறும் அபிவிருத்திகள் மூலம் ஏராளமானோர் வேலை வாய்ப்புப் பெற முடியும். வடக்கைத் துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசாங்கம் தீட்டியுள்ள திட்டத்தின் ஒரு பகுதியாகவே மேற்கூறிய தொழிற்சாலைகள் செயற்படுத்தப்படவுள்ளன. இன்றைய அரசாங்கம் வட க்கின் அபிவிருத்தியில் கூடுதலான அக் கறை செலுத்துகின்றது.

நீண்டகாலமாக அபி விருத்தியின் சாயலையே கண்டிராத வடக்கு வளம் கொழிக்கும் பூமியாக மாறுவதற்கான ஆரம்பமே அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம். இத்திட்டம் விவசாயம், கைத்தொழில், மீன்பிடி, வீடமைப்பு, வீதி நிர்மாணம் எனச் சகல துறைகளையும் உள் ளடக்குகின்றது.

மக்களின் நலன் பேணும் உண்மையான பிரதிநிதித்துவம் இன்றைய அரசாங்கமே என்பதை வடபகுதி மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply