இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கும் பிரித்தானிய நாட்டு தூதுவருடன் சுமந்திரன் சந்திப்பு
இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹூல்டனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.
ஐ.நா. மனித உரி மைகள் ஆணைக்குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் உட்பட பல விடயங்கள் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.
மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் ஒன்றை பிரித்தானியாவே கொண்டுவரவுள்ள நிலையில் சுமந்திரனின் இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக அமையும் என கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply