காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு முக்கிய அறிவிப்பு:அஜித் ரோஹண
சுகாதார ஆலோசனைகளை மீறி காதலர் தின களியாட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான களியாட்ட நிகழ்வுகளை முன்னெடுப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் விருந்துபசார மற்றும் திருமண நிகழ்வுகளிலேயே அதிக கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், சமூக வலைத்தளங்களின் ஊடகவே பல்வேறு களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதனால், காதலர் தினம் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் அனுமதியின்றி களியாட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்களை முன்னெடுப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply