கடன்/லீசிங் தவணை முறையில் வாகனம் வாங்கியோருக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
கடன் தவணை மற்றும் லீசிங் தவணைகளை ஒரே தடவையில் செலுத்தி நிறைவு செய்யும் சந்தர்ப்பத்தில், அதற்கான வாடிக்கையாளர்களிடமிருந்து மேலதிக தொகையை பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகளை நிறுத்தும் இயலுமை குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, மத்திய வங்கி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உரிய தவணை காலம் நிறைவடைவதற்கு முன்னராக நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் அல்லது லீசிங் தவணையை ஒரே தடவையில் செலுத்தி நிறைவு செய்யும் போது, அதற்காக நிதி நிறுவனங்கள் செலுத்துகின்ற தொகையில் 3 வீதத்தை மேலதிகமாக அறவிடுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
சில நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு மாத்திரம் இந்த நிதியை அறவிடாது, உடன்படிக்கையை நிறைவு செய்வதாக தெரியவந்துள்ளது.
நிதி நிறுவனங்களின் தேவைக்கேற்ப அறவிடப்படும் இந்த அறவீட்டு முறைமையை ரத்து செய்து, பொது கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்து நிதி நிறுவனங்களும், மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் செயற்படுகின்றமையினால், அந்த அறவீட்டு முறைமையை ரத்து செய்வது தொடர்பில் ஆராயுமாறு பிரதமர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, இந்த அறவீட்டு முறைமை எந்த விதத்திலும் நியாயமானது அல்லவென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த அறவீட்டு முறைமையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply