முகாம்களில் 2000 பேரிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை: அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ்

இடம் பெயர்ந்து வவுனியா கதிர்காமர் கிராமத்தில் தங்கியிருக்கும் 20,000 பொதுமக்களில் 2000 பேர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும், 800 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாமலும் உள்ளனர். தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

“முதியவர்களும், இளைஞர்களும் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும் இருக்கின்றனர்” என்றார் அவர். மோதல்ப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சேத விபரங்களை கணக்கிடுவதற்காக நேற்று புதன்கிழமை அந்தப் பகுதிக்கு குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் குறிப்பிட்டார். “உடனடியாக அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள், இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கான புனர்நிர்மாண நடவடிக்கைகளின் அபிவிருத்திக் கட்டமைப்புகளை நாங்கள் தீர்மானிப்போம்” என்றார் அவர்.

நெடுங்கேணிப் பிரதேசம் முதலில் புனரமைப்புச் செய்யப்படுமென்பதுடன், கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply