புலிகளின் கொடும்பிடியில் இருந்து தப்பி 39 பொதுமக்கள் ஓமந்தை வந்தனர்.
புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வன்னியில் வசித்த 39 பேர் இரு குழுவாக இன்று ஓமந்தை பகுதியில் உள்ள இராணுவத்திடம் வந்து சேர்ந்துள்ளனர். 8 பெண்களைக் கொண்ட 14 பேர் ஒரு குழுவாக இன்று காலை 10.30 மணியளவில் வந்ததாகவும் 10 பெண்களைக் கொண்ட 25 பேர் மற்றொரு குழுவாக இன்று காலை 7.30 மணியளவில் வந்ததாக பாதுகாப்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களுக்கு உடனடி அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வவுனியாவில் உள்ள இடைக்கால தங்கு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மேலும் அச்செய்தி தெரிவிக்கிறது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply