ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்ஷ சர்ச்சை பேச்சு

ரிசாத் பதியூதின், ஹிஸ்புல்லா போன்றவர்களே நாட்டில் அடிப்படைவாதத்தை போசித்ததாகவும் ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இருந்ததும் இவர்களே எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இவர்களை முஜிபுர் ரஹுமான் போன்றவர்கள் பாதுகாத்ததாகவும் அசாத் சாலி பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதனால் பொலிஸாருக்கு விசாரணை செய்ய வேண்டிய ஒன்றும் இல்லை எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் விஜயதாஸ கூறியுள்ளார்.

அன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியதற்கான தன்னை நீதி அமைச்சர் பதவியில் இருந்து விலக்க ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முடிவு செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply