சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு கிழக்கு மக்கள் செயற்படக் கூடாது : அமைச்சர் தினேஷ்
அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை இழக்கும் வகையில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் செயற்படக் கூடாது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டிருந்தார்.
கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பெரும்பான்மையின மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தற்போதைய அரசாங்கத்தினையும் அதன் திட்டங்களையும் வடக்கு கிழக்கு மக்களும் ஆதரிக்க வேண்டும் என்றும் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார்.
மேலும் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி நிலையை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply