சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய புழுதிப் புயல்

சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதி புயல் வீசியது. இதன் காரணமாக தலைநகர் முழுவதிலுல் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்ஜிங் நகரில் மோசமான புழுதி புயல் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக பெய்ஜிங்கிலுள்ள இரண்டு விமான நிலையங்களில் இருந்தும் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு பாலைவனங்களில் இருந்து மணல் கிழக்கு நோக்கி வீசும் என்பதால் வசந்த காலங்களில் இதுபோன்ற புயல்கள் வழக்கமாக ஏற்படும்.

புழுதி புயல்கள் ஏற்படுவதைத் தடுக்க சீனா நகரம் முழுவதும் சீனா மரங்களை நட்டு வருகிறது. இருப்பினும், நகர் விரிவாக்கம், தொழிற்சாலைகள் உள்ளிட்ட காரணங்களால் புழுதி புயலைச் சீனாவால் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள புழுதி புயல் 12 மாகாணங்களைப் பாதிக்கும் என்றும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட புழுதி புயலில் இது மோசமானது என்றும் சீனா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் காற்று தரம் மிகவும் மோசமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தற்போது புழுதி புயலும் ஏற்பட்டுள்ளதால், காற்றின் தரம் மேலும் மோசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply