வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கிட்டத்தட்ட கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று அனைத்து தரப்பினரும் நிம்மதி பெருமூச்சு விட்டுவந்த நிலையில், கொரோனா வைரஸ் மீண்டும் மிகவேகமாக பரவ தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு அதிகளவில் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் பரவல் ஓய்ந்துவிட்டதாக மக்கள் தங்களுக்குத் தாங்களே நினைத்துக்கொள்வதும், வீட்டைவிட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிவதை கவுரவ குறைவாகவும், வசதி குறைவாகவும் நினைப்பதுதான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதற்கு காரணமாகும். வெளியில் வரும் போது முகக்கவசம் அணிவது, கையுறைகளை அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை நன்றாக கழுவுவது, கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வருவதில்லை. எனவே, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வயது வரம்பின்றி அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply