கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பில் இலங்கையிலும் ஆய்வு:இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி

கொரோனாத் தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்
வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் குழுவொன்று
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர்
சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

பக்கவிளைவுகள் ஏற்பட்டமையால், கொவிஷீல்ட் அஸ்ட்ரா ஜெனெகா
தடுப்பூசியின் பாவனையை சில நாடுகள் தற்போது தற்காலிக
மாக நிறுத்தியுள்ளன.

இலங்கையிலும் கொவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களில்
இதுவரை 30 பேருக்கு குருதி உறைதல் ஏற்பட்டுள்ளதாகப் பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக
ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

எ வ் வாறி ரு ப் பி னு ம் இ ல ங்கையில் தடுப்பூசிப் பாவனையை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply