விமல் வீரவன்சவுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில், பொய்யானதும் வெறுக்கத்தக்கதுமான கருத்துகளை வௌியிடுவதைத் தடுக்கும் வகையில், கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே, அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான கருத்துகளை வௌிப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மூன்றுக்கும் இத்தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, மனுவின் பிரதிவாதிகளை எதிர்வரும் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி ருஸ்ஜி அபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச, கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம், தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இவ்வாறான பொய்யான கருத்துகளை வௌியிட்டமை மற்றும் தமது பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபாய் நட்டஈட்டை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத் தருமாறும் தனது மனுவின் ஊடாக ரிஷாட் பதியுதீன் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply