இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் வரவுள்ளார் : அமைச்சர் தேவானந்தா
இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் விரைவில் வரவுள்ளார். அப்போது நீங்கள் அவரைச் சந்திக்க விரும்பினால் அதற்கான வாய்பை நான் ஏற்படுத்தி தருவேன் என்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார். துணைவேந்தர் ஊடாக விண்ணப்பித்தால் இந்தியத் தூதரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ-9 வீதி ஊடாக வாரத்தில் மூன்று தடவைகள் ஐந்து பஸ்கள் சேவையில் ஈடுபட இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆரம்ப நாள்களில் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டாலும் காலப் போக்கில் சேவைகள் வழமைக்கு திரும்பி விடுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு நேற்று (ஜூலை 3) விஜயம் செய்த அமைச்சரிடம் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.
போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் எழுப்பியகேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் அன்றி பொதுமக்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளேன். விரைவில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏ-9 பாதையை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. வாரத்தில் மூன்று தடவைகள் 5 பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply