முக்கியமான தருணத்தில் இந்தியா ஆதரவளிக்கும் : இலங்கை நம்பிக்கை
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பேன் என இந்தியா உறுதியளித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருங்கிய அயல்நாடு என்ற அடிப்படையில் இந்தியா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது இந்தியா ஒரு வல்லரசு என்பதை கருத்தில்கொள்ளும்போது அதன் நிலைப்பாட்டை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பூகோள ரீதியில் முக்கியமான அமைவிடம் காரணமாக அனைத்து நாடுகளும் நன்மையை பெற முயல்கின்றன வர்ததக மற்றும் ஏற்றுமதி உறவுகளின் அடிப்படையில் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன எனினும் மேற்குலகின் அழுத்தங்களிற்கு அடிபணியப்போவதில்லை என இலங்கை தெரிவித்துவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இதுவரை நடுநிலை வகிக்கின்றது,தமிழ்நாடு தேர்தல் உட்பட பல காரணங்களால் இந்தியா அவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றலாம் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் இந்தியாவின் நகர்வை எதிர்பார்த்துள்ள போதிலும் முக்கியமான தருணத்தில் இந்தியா ஆதரவளிக்கும் என இலங்கை எதிர்பார்க்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply