புர்கா தடை-இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு கண்டனம்

இலங்கையில் புர்காவை தடைசெய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவது குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஐசிசிபிஆர் சட்டத்திற்கு முரணாக புர்கா மற்றும் மத்ரசாக்களை தடைசெய்வது குறித்த அமைச்சரின் அறிவிப்பை கண்டிப்பதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் கண்டிக்கவேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான பாரபட்சமாக இஸ்லாம் குறித்து அச்சத்தை தூண்டுகின்ற அறிக்கைகளை இலங்கை அரசாங்கம் கண்டிக்கவேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சுயாதீன நிரந்தர மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply