சீன தடுப்பூசியை எடுத்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
சீனாவில் தயாரான சினோபார்ம் தடுப்பூசியின் 5 லட்சம் டோஸ்கள் கடந்த பிப்ரவரி 1ந்தேதி பாகிஸ்தான் நாட்டுக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
அந்நாட்டில் 6.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. கடந்த 10ந்தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதன்படி, முதியோர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.
பாகிஸ்தானில் சினோபார்ம் மற்றும் ஆஸ்டிரோ ஜெனிகா தடுப்பூசிகளை தவிர்த்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் மற்றும் சீனாவின் கேன்சினோ பையோலாஜிக்ஸ் தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
எனினும், பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தடுப்பூசி போடும் பணி தொய்வடைந்தது.
இந்த நிலையில், சீனாவின் 2வது கட்ட சினோபார்ம் தடுப்பூசிகன் ராவல்பிண்டி நகரில் உள்ள நூர் கான் விமான தளத்திற்கு வந்து சேர்ந்தது. இதனை அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் பெற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று எடுத்து கொண்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : கருத்துக்களம்You can leave a response, or trackback from your own site.
Leave a Reply