பிரான்ஸ் உள்ளிட்ட 4 ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ராஜெனகா மருந்துக்கான தடை நீக்கம்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுவதாக புகார் எழுந்தன. இதனால் அந்த தடுப்பு மருந்தை பல்வேறு ஐரோப்பிய நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன. ஆனால் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த தடுப்பூசியை மீண்டும் மக்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த அந்நாட்டு அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஆய்வு அறிக்கைகளின் முடிவுகளில் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது தெளிவாகியிருப்பதால், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply