எமது சமூகத்தை தலை நிமிர்ந்து வாழ வைப்பதற்கு தான் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பார்கள்: அமைச்சர் டக்ளஸ்
எல்லாவற்றையும் இழந்த நிலையில் இன்று எமது மக்கள் இழப்பதற்கு எது வுமே இல்லை என்ற நிலையை அடைந் திருக்கும் இந்தச் சூழ்நிலையில் எதுவுமே இல்லை என்ற நிலை இல்லாதொழிந்து அனைத்தும் பெற்ற ஒரு சமூகமாக எமது சமூகத்தை தலைநிமிர்ந்து வாழவைப்ப தற்கு தான் மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியிலான முயற்சிகளுக்கு எமது மக்கள் அணிதிரண்டு வந்து உதவிக் கரம் நீட்டு வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்ப தாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொண்டலடி யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த 4ம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா தொடர்ந்தும் குறிப்பிடுகையில் எமது மக்களின் நலன்களில் இருந்தே நாம் இம்முறை யாழ். மாநகரசபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுவ தாகவும் தனித்துவங்கள் பேணப்பட்ட நிலையிலேயே ஈ.பி.டி.பி. இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்றும் தெரிவித்தார். நாம் ஒருபோதும் எமது மக்களை கைவிட்டுவிட்டு ஓடிவிடவில்லை என் பதை உணர்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்றும் இன்றும் எப்போ தும் நாம் எமது மக்களுடன் இருப்பதால் தான் எமது மக்களின் தேவைகளை அறிந்து எங்களால் உரிய முறையில் பணியாற்ற முடிகிறது என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply