பாகிஸ்தானில் 75% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட 10 ஆண்டுகள் ஆகும்; அறிக்கை தகவல்
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஞாயிற்று கிழமை 3,568 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. அவர்கள் தீவிர சிகிச்சை பெற்ற வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையானது, பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து மிக அதிகம் ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் 3,953 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,96,184 ஆக உள்ளது.
இதனை தொடர்ந்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டும், ஊரடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டும் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டும் உள்ளன. கடந்த 2 வாரங்களாக நோயாளிகள் தீவிர சிகிச்சை பெற்றும் மற்றும் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்தும் காணப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றில் வெளியான அறிக்கை, பாகிஸ்தானில் 75 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட 10 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கின்றது.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் 3 மாதங்களில் 75 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்கை அடைந்து விடும். ஆனால், பாகிஸ்தான் போன்ற பிற நாடுகளில் இதே அளவிலான மக்கள் தொகையினர் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு ஒரு தசாப்த காலம் எடுத்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வழியே பரவலை தடுக்கும் வகையில் மக்களிடையே நோயெதிர்ப்பு சக்தி பெறுவதற்கு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply