உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு பயணிகளும் ஏராளமானோர் வந்து வழிபாடுவார்கள். இது முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
தற்போது கம்போடியாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இதை தடுக்க இந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக அங்கோர்வாட் ஆலயத்துக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டினர் மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 20-ந்தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று கம்போடியாவின் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply