சட்ட மூலத்தில் சீன கொலனி ஏற்படும் என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை
கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு 83 ஆயிரம் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். சட்ட மூலத்தில் சீன கொலனி ஏற்படும் என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. சில அரசியல் வாதிகள் மக்களை ஏமாற்றுவதற்காக இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஐந்து வருட காலப் பகுதியில் துறைமுக நகரின் ஊடாக ஆயிரத்து 500 கோடி டொலர் முதலீடு நாட்டிற்குக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,கொழும்பு துறைமுக நகர் ஆணைக்குழு சட்ட மூலம் முதலீட்டாளர்களுக்கு வசதிகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. சிலர் இவ்வாறான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதை விரும்பவில்லை. இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றியளிக்கும் போது அவர்களின் அரசியல் கட்டமைப்பு வீழ்ச்சியடைவது இதற்கான காரணமாகும்.
துறைமுக நகரின் பாதுகாப்பை இலங்கை பொலிஸ் திணைக்களமே முன்னெடுக்கும். துறைமுக நகரில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் ஒரு மாதத்திற்கும் குறைந்த காலப் பிரிவில் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. அந்த வழக்குகளை நாட்டில் உள்ள நீதிமன்றங்களே விசாரணை செய்யும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply