நான்கு நாட்கள் நாடாளுமன்றம் கூடும்
நாடாளுமன்ற அமர்வுகளை இன்று (20) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முற்பகல் 10.00 முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை, எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சேவை உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அன்றையதினம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்காது முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply