சவூதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை : நிமல் சிறிபால டி சில்வா
சவூதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 பேரை இலங்கைக்கு விரைவில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அதன்படி சவூதி அரேபியாவில் தடுப்பு முகாம் மற்றும் சிறைகளிலுள்ள இலங்கைப் பெண்களை இலங் கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
சவூதி அரேபியாவிலுள்ள ஒரு தடுப்பு முகாமில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்பு சபையினால் கருத்து வெளியிடப் பட்டதைத் தொடர்ந்து,
குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை விடுதலை செய்வது தொடர்பாக சவூதி அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த பெண்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர்களை இலங்கைக்கு அனுப்ப சவூதி அரசு இணங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சவூதி அரேபிய விமானம் மூலம் தடுப்பிலுள்ள பெண்களை இலங்கைக்கு அனுப்ப சவூதி அரசு ஒப்புக் கொண்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
அதன்படி, இலங்கையில் சவூதி அரேபிய விமானத்தை தரையிறக்குவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கைக்குப் பொருத்தமான கொரோனா தொற்று தொடர்பான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் களின்படி குறித்த பெண்களை மிக விரைவாக இலங்கைக்கு அழைத்து வரவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply