இந்தோனேசியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் மாயம் : 53 ராணுவ வீரர்களின் கதி என்ன?

இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்த நீர்மூழ்கி கப்பலில் ராணுவ 53 வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த நீர்மூழ்கி கப்பல் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது, அதில் உள்ள 53 வீரர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.‌

இதையடுத்து அங்கு போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி தஜ்ஜான்டோ கூறினார்.

மேலும் நீர்மூழ்கி மீட்பு கப்பல்களை வைத்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாகவும் தஜ்ஜான்டோ தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply