இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க தினமும் ரூ. 25 கோடி செலவு
வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தின மும் 25 கோடி ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்த மக்களுக்கு தினமும் உணவு, உடை, மருத்துவ வசதி கள், கல்வி மற்றும் நலன்புரி சேவைகள் அளிப்பதற்காக அரசாங்கம் தினமும் 25 கோடி ரூபா செலவிடுகிறது.
அந்த மக்களுக்கு சகல வசதிகளையும் வழங்க அரசாங்கம் சகல நடவடிக் கைகளையும் எடுத்து வருகிறது. வடக்கில் மீட்கப்பட்ட பகுதிகளில் மறைத்து வைக்க ப்பட்டுள்ள ஆயுதங்களை கண்டுபிடிப்பதிலும் நிலக் கண்ணி அகற்றுவதிலும் படையினர் பெரும் பங்காற்றி வருகின்றனர்.
அவர்கள் உயிரை அர்ப்பணித்து இந்தப் பணிகளை செய்து வருகின்றனர். நிலக்கண்ணி அகற்றும் பணிகளுக்கு வெளிநாடுகளும் உதவி வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply