மாகாணசபைகளுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்

மாகாணசபைகளுக்கு காணி காவற்துறை அதிகாரங்கள் மாத்திரமல்லாது சகல அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மாகாணசபை நிறுவனங்கள் பட்டியலில் உள்ள அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

திட்டமிடல் கல்வி உயர்கல்வி, சுற்றுலா, நீர்பாசனம், சுகாதாரம், விவசாயம், கமத்தொழில் சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 36 அதிகாரங்கள் நிறுவனப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 13வது அரசியல் சாசனத் திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் அடுத்த கட்டமாக நிறுவனங்களின் பட்டியலில் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் இதன்மூலம் நாட்டின் அபிவிருத்தி மாகாணசபைகளுக்கு முக்கிய பங்காற்ற முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply