வவுனியா பாரதிபுரம் பாடசாலை அதிபர் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பகிஷ்கரிப்பு

வவுனியா பாரதிபுரம் பாடசாலை அதிபர் நடராசா ரமேஸ்கந்தா கடந்த சனிக்கிழமை இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று புதன்கிழமை வவுனியாவில் அனைத்துப் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர். பகிஷ்கரிப்பு காரணமாக பாடசாலைகள், மாணவர்கள் வரவின்றி வெறிச்சோடிக் கிடந்தன. எனினும் வவுனியா நகரத்தில் நிலைமை வழமைபோல் காணப்பட்டது.

வவுனியா தெற்கு வலய அதிபர் சங்கம், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்க வவுனியா கிளை, செட்டிக்குளம் கிளை, இலங்கை ஆசிரியர் சங்கம் வவுனியா கிளை, இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்பன இந்த பகிஷ்கரிப்புக்கான அழைப்பை விடுத்திருந்தன. பாரதிபுரம் பாடசாலை அதிபர் ரமேஸ்கந்தா அரிசி ஆலை முகாமையாளரான குணரத்தினம் சிவரூபன் என்பவரோடு பாரதிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இனந்தெரியாத நபர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் பிரயாணம் செய்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றிருந்தனர் என்பதும், பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலை அதிபர் ரமேஸ்கந்தாவின் இறுதிக்கிரியைகள் திங்களன்றும், சிவரூபனின் இறுதிக்கிரியைகள் செவ்வாயன்றும் நடைபெற்றன

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply