புலிகளின் அழுத்தம் காரணமாக யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொய்யான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டோம்

படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பொய்யான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியமைக்காக மன்னிப்புக் கோருவதாக வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் யுத்தத்தின் இறுதி நேரம் வரையில் சேவையாற்றி வந்த ஐந்து வைத்தியர்கள் முதல் தடவையாக ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளனர்.

புலிகள் அமைப்பினால் தம்மீது பிரயோகிக்கப்பட்ட மிதமிஞ்சிய அழுத்தமே உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கக் காரணம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வேறும் வழியில்லாத காரணத்தினால் தாம் ஊடகங்களுக்கு பிழையான தகவல்களை வழங்கியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியப் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி, டாக்டர் சண்முகராஜா, டாக்டர் வரதராஜா, டாக்டர் இளஞ்செழியன் மற்றும் டாக்டர் சிவபாலன் ஆகியோரே யுத்த சமயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் கடமையாற்றி வந்தனர்.

பி.பி.சீ, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் டைம்ஸ் போன்ற பல ஊடகங்களுக்கு குறித்த வைத்தியர்கள் யுத்த காலங்களில் செவ்விகளை வழங்கியிருந்தமை நினைவுகூறத்தக்கது.

இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த வைத்தியர்கள் புலிகளின் அழுத்தம் காரணமாக பொய்யான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply