ஜனாதிபதி தலைமையிலான அரசு தமிழருக்கு சிறந்த தீர்வைத் தரும்
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை தனக்கு எழுந்துள்ளதாக டாக்டர் சின்னத்துரை சிவபாலன் நேற்றுத் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகரான இவர் புலிகளின் மருத்துவ பிரிவின் முன்னாள் உறுப்பினருமாவார்.
டாக்டர் சிவபாலன் நேற்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் தகவல் தருகையில்:- தேவையற்ற யுத்தத்தை உருவாக்கி மக்களுக்கு பாரிய அழிவுகளையே புலிகள் ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் மக்களுக்கான யுத்தம் என்று கூறி வந்த புலிகள், எமது மக்களுக்கு எதிராகவே தமது ஆயுதங்களை நீட்டியதை காணக்கூடியதாக இருந்தது.
2006ம் ஆண்டு ஆட்சோர்பு செய்த புலிகள், 2009ம் ஆண்டு குறைந்த வயது சிறுவர், சிறுமிகளையும் சேர்த்துக் கொண்டதை காண முடிந்தது என்றார்.
தற்பொழுது எமது மக்களுக்கு அரசு சிறந்த உரிமையை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அபிவிருத்திக்கும் தமிழ் மக்களின் நலனுக்காகவும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
எங்களை உயிருடன் பாதுகாத்த ஜனாதிபதிக்கும், படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாக டாக்டர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
தற்பொழுது தாங்கள் சிறந்த முறையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், சிறந்ததொரு நாடாக இலங்கையை கட்டியெழுப்ப சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
படையினரின் வசம் இருக்கும் பொதுமக்கள் சிறப்பான முறையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply