கைது செய்யப்பட்ட 10ஆயிரம் புலிச்சந்தேக நபர்களில் ஆயிரம் பேருக்கு எதிராகவே வழக்கு: இராணுவத் தளபதி
பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள 10ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஆயிரம் பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்த சட்டப் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என்று இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதேவேளை ஏனைய 9ஆயிரம் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அவர்களை புனர்வாழ்வு நிலையங்க ளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். வன்னியின் நடைபெற்ற இறுதிக்கட்ட இராணுவ நடவடிக்கைகளை விளக்கும் வகையில் “வன்னி இறுதி மகா யுத்தம்’ என்ற பெயரில் கொழும்பில் நேற்று முன்தினம் நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
வடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது மொத்தமாக 22ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 10ஆயிரம் உறுப்பினர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதேவேளை புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும் அவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் என்று சுமார் 10ஆயிரம் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் தற்போது படையினரின் பாதுகாவலில் உள்ளனர்.
இவர்களில் சுமார் ஆயிரம் பேர் மட்டுமே பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களாவர். அதனால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வது குறித்த சட்டப் பின்னணி குறித்து ஆராயப்பட்டு வருகின்றது
இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள புலி உறுப்பினர்கள் 15 முதல் 16 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களாவர். இவர்கள் இராணுவத்திடம் சரணடையாமல், முகா ம்களில் மறைந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் பாரியளவில் பயங்கரவாத செயல்களுட ன் தொடர்புடையவர்கள் என்பதோடு அவர்களில் பலர் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களாகவும் காணப்படுகின்றனர். அதனாலேயே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஏனைய ஒன்பதாயிரம் பேரையும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான சுயதொழில் பயிற்சிகரைளயும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply