ஊடகங்கள் அனைத்தும் பக்கச்சார்பற்ற முறையில் மக்களுக்கு சேவை செய்வது பாராட்டதக்கது: யூலியன் ஞானப்பிரகாசம்
இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் செயற்பட்டுக்கொண்டு வரும் ஊடகங்கள் அனைத்தும் மக்களுக்கு பக்கச்சார்பற்ற முறையில் செய்திகளையும் தகவல்களையும் வழங்கி சேவையாற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறமுடியும். கடந்த மூன்று தசாப்பத்தங்களாக தமிழ் மக்களும் தமிழ் ஊடகங்களும் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வந்தன அது தற்போது இலங்கை சனநாயக குடியரசின் தலைவர் கௌரவ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முப்பது வருடகால கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் இவ் அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.
புலிகளுக்கெதிரான இலங்கை அரசின் யுத்த நடவடிக்கையின் இறுதி கட்டத்தின் போது பல ஊடங்கள் இலங்கை அரசிக்கும் தமிழ் மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளது. குறிப்பாக யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற முற்பட்ட தமிழ் அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த இக்கட்டான வேளையில் சர்வதேச நாடுகளுக்கும் , ஐ.நா சபையினருக்கும் இது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை விடுவிக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை தெரிவித்து உலக நாடுகள் புலிகளுக்கு பாரிய அழுத்தம் கொடுப்பதுக்கு உதவியாக அமைந்தன. இதில் இலங்கை மற்றும் சர்வதேச செய்தி இணையத்தளங்களும் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் இருக்கும் மக்களை நிமிடத்துக்கு நிமிடம் அவதானித்து அவர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் இலங்கை அரசிக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவித்ததன் மூலம் இன்று இலங்கை அரசினாலும் உலக நாடுகளினாலும் பல்வேறு பட்ட உதவிகள் நலம்புரி நிலையங்களில் இருக்கும் தமிழ் மக்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இவ் செயற்பாடுகள் மூலம் அகதிமுகாம்களில் இருக்கும் மக்களுக்கு ஒரு பக்கதுனையாக ஊடகங்களும், ஊடக அமைப்புக்களும் இருக்கின்ற வேளையில் சில புலிகளின் சார்பு ஊடகங்களும் புலம்பெயர் புலி ஆதரவாளர்களும் தமிழீழ அரசு என்ற மாயையின் மூலம் மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற கனவுலகத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு அமைச்சர் கருணா அம்மானின் உறுதியான தலமைத்துவமும் பலமான தமிழ் ஊடகங்கள் இருக்கும் வரையில் புலிகளினதும் புலி ஆதரவாளர்களினதும் செயற்பாட்டிக்கு இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துளி கூட இடமில்லை.
இப் புலி ஊடகங்களின் இலங்கை அரசின் இறையான்மைக்கு கலங்கம் ஏற்படுத்தும் பொய்யான பிரச்சாரங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்னையும் இல்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகையால் மக்களுக்காக சேவை செய்ய புறப்பட்ட அனைத்து தமிழ் ஊடகங்களும் நாட்டின் இறையான்மைக்கு தீங்கு விளைவிக்காத மக்கள் நன்மை பெறக்கூடிய சேவையை ஆற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் பலம் கூடுவதோடு சிங்கள சகோதர இன மக்களிடம் தமிழ் மக்கள் பற்றிய அபிப்பிராயம கூடும் என்பது அனைவரும் எதிர்பாக்கும் விடயம். இக் காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு முழுமூச்சுடன் சேவையாற்றுவது காலத்தின் தேவையாகும்..
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply