உயிரிழப்பு தொடர்பான புள்ளி விபரங்களில் திருத்தங்கள் ஏற்படுத்தும் திட்டமில்லை: கோர்டன் வைஸ்

இலங்கையில் படையினருக்கும்  விடுதலைப் புலிகளுக்கும் கடந்த காலங்களில் வடக்கில் இடம்பெற்ற உக்கிர மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்கள் குறித்து புள்ளி விபரங்களின் திருத்தங்களை ஏற்படுத்தும் திட்டமில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்த பொதுமக்கள் குறித்த தமது புள்ளி விபரங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாதென சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து தமது முன்னைய நிலைப்பாட்டில் எவ்வித திருத்தங்களும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் அழுத்தம் காரணமாக பொய்யான தகவல்களை வெளியிட்டதாக வன்னி வைத்தியர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர். எனினும், இந்த கூற்றுக்களுக்காக தமது புள்ளி விபரங்களில் திருத்தங்கள் ஏற்படுத்தப்படமாட்டாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வன்னியில் கடமையாற்றிய ஐந்து வைத்தியர்களும் தாம் உண்மைக்குப் புறம்பான பொதுமக்கள் இழப்பு விபரங்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தனர்.

வைத்தியர்கள் தங்களது மதிப்பீடுளையே வெளியிட்டுள்ளதாகவும், இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னர் வெளியிட்ட புள்ளி விபரங்களை மாற்றும் உத்தேசம் இல்லை எனவும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply