இடம்பெயர் மாணவரின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம்: ரத்னசிறி விக்ரமநாயக்க

இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர்கல்வி மேம்பாட் டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமை யில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன் முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட் டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனை வரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும். பயங்கரவாதம் காரணமாக மிக மோசமாக பாதிக் கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.

ந்த 50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவு களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக் கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந் திருக்கும்.

சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கை கள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண் டியது அவசியம் என்றார்.

வறுமை என்பது இன்று நாம் அனைவரும் ஒன்றி ணைந்து கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய பிரச்சி னையாகும். ஏனெனில் இதனால் ஒரு குடும்பத்தில் மிக மோசமாக பாதிக்கப்படுவது சிறுவர்களேயாகும். சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள் துரிதமாக முன்னெடுத்துச் செல்லும் மூலோபாயங்களையும் புதிய திட்டங்களையும் வகுத்துக் கொள்ள இந்த கொழும்பு மாநாடு வழிகாட்டும் என நான் நம்புகின்றேன்.

எமது சிறுவர்களின் நன்மை குறித்து எம்மால் வகுக்கப் பட்ட இலக்குகளை நாமாகவே அடைந்து கொள்வதற்கு சுயமான தலைமைத்துவங்களை உருவாக்கி அதற்கான வழி வகைகளை ஆராய வேண்டும். இதற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியதும், ஒருவரிடமிருந்து மற்றவர் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். சார்க் இதற்கான அரிய வாய்ப்புக்களை வழங்குகிறது.

சிறுவர்கள் எல்லா மட்டத்திலும் வழிகாட்டப்பட வேண்டியவர்கள். அரசியல் தலைமைத்துவம் மட்டுமன்றி பெற் றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், சமூகத்தினர், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று சிறுவர்களுக்கு சேவை வழங் கும் பட்டியல் நீண்டு செல்கிறது.

சார்க் நாடுகளின் அரசாங்கங்கள் சிறுவர்கள் மீதான வேலைத்திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடுகளையும், செலவு களையும் அதிகரித்திருப்பது குறித்து நாம் நியாயமான மகிழ்ச்சியடையக் கூடிய நிலை இருக்கின்றது. சிறுவர்களுக்கான முதலீடுகளை அதிகரிப்பது என்பது தெற்காசிய பிராந்தியத்திலுள்ள நாடுகள் தனித்தனியாக வும், ஒட்டுமொத்தமாகவும் தெற்காசிய பிராந்தியத்திற் கான முதலீட்டை அதிகரித்துள்ளன என்பது அர்த்தமாகும் என்றார்.

எமது பாரம்பரிய விழுமியங்கள், கலாசாரம், வரலாறு என்பன பொதுவான ஒரு அடிப்படையில் இருப்பதால் சார்க் உறுப்பு நாடுகளுக்கிடையே நெருக்கத்தை வளர்த்துக் கொள்ள வசதியாக உள்ளது. சுதந்திர இலங்கையில் மாறி மாறி பதவிக்கு வந்த அர சாங்கங்கள் வித்தியாசமான அரசியல் கொள்கைகளை கொண்டிருந்த போதிலும் சிறுவர்கள் சார்பான விடயத் தில் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. பாரபட்சமின்றி இலவச கல்வி, இலவச சுகாதார வசதிகளை வழங்கி வருகின்றது.

தொடர்ச்சியான இந்த கொள்கைகளின் காரணமாக எமது நாட்டில் 5 வயதுக்கு குறைந்த சிசு மரணம் கனிச மாக குறைந்துள்ளது. ஆயுள் எதிர்பார்க்கை காலம் ஆண் களுக்கும், பெண்களுக்கும் அதிகரித்துள்ளது. ஆண், பெண் கள் மத்தியில் எழுத்தறிவு வீதம் அதிகரித்துள்ளது. இருப்பி னும் எமது சிறுவர்கள் மீது மேலும் கூடிய கவனம் செலுத்தும் தேவை எமக்குண்டு. இதற்கென தேசிய ரீதி யில் சட்டங்கள் வகுக்கப்பட்டு அமுல் செய்வதன் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகத்தை முழுமையாக தவிர்க்கலாம்.

எமது சிறுவர்களின் நலன்பேன அரசியல் செயற்பாடும் அவசியமாகும். அதிகாரத்தின் உயர் மட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இந்த அணுகு முறையை பேணுவதற்கு நாம் திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.

சிறுவர்களின் உரிமை என்பது ஒரு தெரிவாகவோ, அல்லது அவர்களுக்கு சாதகமான ஒரு விடயமாகவோ அல்லது அவர்கள் மீது கருணை காட்டும் விடயமாகவோ இருக்க முடியாது. அதை ஒரு தர்மமாகவும் கருத முடியாது. மாறாக  எமது கடப்பாடாகவும், பொறுப்பாகவும் இருக்க வேண்டும். எந்த பாகுபாடு இன்றி எல்லோரும் சிறுவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் பெண்கள், சிறுவர் அபிவிருத்தி அமைச் சின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீமத் கிருஷ்னா திராத், பாகி ஸ்தானின் சமூக நலன்புரி விசேட கல்வித்துறை அமைச்சர் சமினா காலித் குர்கி, பூட்டான் கல்வி அமைச்சர் லியோ ன்போ தாக்கூர் பெளடெல், மாலைதீவின் குடும்ப சுகா தார அமைச்சின் பிரதியமைச்சர் மரிய்யா அலி, பங்களா தேஷ் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் திப்பு மோனி, நேபாள பெண்கள் சிறுவர் சமூக நலன்புரி அமைச்சின் செயலாளர் பிந்ரா ஹாதா, ஆப்கானிஸ்தானின் தொழில் சமூக விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் பேராசிரியர் வாசில் நூர் முஹம்மத் ஆகியோர் எட்டு நாடுகளையும் பிரதிநிதித்துவம் செய்து இந்த மாநாட்டில் கலந்து கொண் டனர். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம, உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர் பலர் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply