இடம்பெயர் வாக்காளர் தாம் வாழும் பகுதியில் வாக்களிக்க விசேட ஏற்பாடு
யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை தேர்தல்களில், இடம்பெயர்ந்த வர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக அவர் கள் வாழும் பிரதேசங்களில் விசேட வாக் களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.அதேநேரம், அண்மையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்போருக்காக வும் விசேட வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெறவுள்ளன.
யாழ்ப்பாணம், மாநகர சபை பிரதேசத் தில் வசித்து இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியா, கொழும்பு, புத்தளம், அனுராத புரம், கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங் களில் வாக்குச் சாவடிகள் அமைக்கத் தீர் மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த வாக்குச் சாவடிகளை அமைக்கும் பணிகளைத் தேர்தல்கள் தலைமையகம் மேற்கொண்டு வருகின்றது.இந்த வாக்குச் சாவடிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் யாழ்ப்பாண உதவித் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப ப்படும். அதன் பின்னர் குறித்த வட்டார முடிவுடன் சேர்த்து இறுதி முடிவு அறி விக்கப்படும்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வெளியே 6132 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள் ளார்களென யாழ். உதவித் தேர்தல் ஆணையர் அலுவலகம் தெரிவித்தது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் நான்கு முகாம்களில் உள்ளவர்கள் வாக்களிக்கவென அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாலயத்தில் வாக்குச் சாவடியொன்று அமைக்கப்படவு ள்ளது. இந்த வாக்காளர்கள் பஸ்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டு, மீண்டும் கொண்டு செல்லப்படுவார்கள். 75 பேர் இவ்வாறு வாக்களிக்க விண்ண ப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் வாக்களிக்கவென மூன்று இரட்டை வாக் குச் சாவடிகளும், ஓர் இடம்பெயர்ந்தவர் களின் சாவடியுமாக மொத்தம் 71 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.இங்கு தபால் மூலம் வாக்களிக்கவென 473 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 335 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர சபைத் தேர்தலில் 183 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட உத வித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கரு ணாநிதி வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.தபால் மூல வாக்களிப்பு 27 ஆம், 28 ஆம் திகதிகளில் நடைபெறும். 15 ஆம் திகதி வாக்குச்சீட்டு அனுப்பப்படும் அதே சமயம், வாக்காளர் அட்டைகள் 21 ஆம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படவுள்ளன.
வவுனியா நகர சபை பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிக்கவெனவும் தனியாக வாக்குச்சாவடி அமைக்கப்படு மென உதவி ஆணையாளர் கருணாநிதி தெரி வித்தார். வவுனியா நகர சபை தேர்தலில் வாக் களிக்க 18 வாக்குச் சாவடிகளும் மூன்று எண்ணும் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க ஒரே திகதியில் (ஒகஸ்ட் 08) நடைபெறவிருக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத் துப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்டங்களின் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply