இந்தியக் கப்பலில் வந்த நிவாரணப் பொருட்கள் இன்று வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படும்: செஞ்சிலுவைச் சங்கம்
கேப் கொலராடோ கப்பல் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாரணப் பொருட்கள் இன்று வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கேப் கொலராடோ கப்பலில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டு சுங்கப் பரிசோதனைகள் முடிவடைந்து விட்டதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
27 பாரிய கொள்கலன்களில் அரிசி, மா, சீனி, குழந்தைகளுக்கான பால்மா, மருந்து வகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் வந்துள்ளன. இதற்கான சுங்க வரியை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே செலுத்தி உள்ளது. இந்த கொள்கலன்கள் இன்று வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்படும்.
“வணங்காமண்’ பயணத்திட்டம் என்று அழைக்கப்பட்ட கப்டன் அலி கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களே சென்னை துறைமுகத்தில் வைத்து “கொலராடோ’ கப்பலுக்கு ஏற்றப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply