ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகளின் பதவிக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தற்போதைய இராணுவ தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு புதிய பதவிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தற்போதைய இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தளபதியாகவும் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் புதிய கடற்படைத் தளபதியாக றியல் அத்மிரல் திசர சமரசிங்கயும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பதவி உயர்வுகள் நாளை மறுதினம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு 35ஆம் இலக்க பாதுகாப்பு சபை கூட்டுப்படை தலைமை அதிகாரி சட்டமூலத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய தற்போதைய இராணுவ தளபதியாகவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 15ஆம் திகதி முதல் கூட்டுப்படைத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இராணுவ தளபதி பதவியில் நிலவும் வெற்றிடத்துக்கு வன்னிகான கட்டளைத் தளபதியாக விளங்கும் மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய கடற்படைத் தளபதியாகவுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடற்படைத் தளபதி பதவியில் நிலவும் வெற்றிடத்துக்கு கடற்படையில் தலைமைப் பதவி வகிக்கும் றியல் அட்மிரல் திசர சமரசிங்க புதிய கடற்படைத் தளபதியாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பதவி வகிப்பார்.

இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரம் வகையில் வட மாகாண ஆளுனர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வட மாகாணத்துக்கான புதிய ஆளுனராக இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை வட மாகாணத்தின் முன்னாள் ஆளுனரான டிக்சன் தேல மாலைதீவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முற்பகல் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

நேற்று 12ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பதவி நியமனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் வடக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நேற்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாணத்துக்கான புதிய தலைவராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை வட மாகாணத்துக்கான முன்னாள் ஆளுனர் டிக்சன் தேலவும் இதேசமயம் மாலைதீவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply