அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு எகிப்தில் நாளை ஆரம்பம்: முதல் நாளில் ஜனாதிபதி உரை

அணி சேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நாளை எகிப்தில் ஆரம்பமாகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். உச்சி மாநாடு எகிப்தின் ஷாம் அல் ஷேக்கில்நாளையும் நாளை மறுதினமும் (14, 15ம் திகதி) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை புதன்கிழமை உரையாற் றுவாரென வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்தார். 118 நாடுகள் இந்த அணி சேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

உச்சி மாநாட்டில் பங்கு கொள்ளும் இலங்கைக் குழுவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிச் செல்கிறார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, வெளிவிவகாரச் செயலாளர் பாலித கொஹன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் குழுவில் கலந்து கொள்கின்றனர்.

‘அபிவிருத்திக்கான சமாதான மும் சர்வதேச ஒருமைப்பாடும்’ என்பதே இந்த உச்சி மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

இதைவிடவும் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், சமாதானத்தை ஏற்படுத்துவதில் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் உச்சி மாநாட்டின் போது ஆராயப்படவுள்ளன. இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி சேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு, மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக எடுத்துக் கூறுவாரென எதிர்பார்க்கப் படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply