மீள்குடியேற்றத்தில் ஒரேமாதிரி செயற்பாடு: வடக்கு அரச அதிபர்களுக்கு பசில் பணிப்பு

வட மாகாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் பங்குகொண்ட உயர்மட்ட மாநாடொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்ட இந்த மாநாட்டில், வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், கிளிநொச்சி அரச அதிபர் நா. வேதநாயகன், முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், மன்னார் அரச அதிபர் ஏ. நிக்கலஸ்பிள்ளை, ஆகியோரும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், மாகாண பிரதான செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகத் தமது திட்ட அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்துள்ளனர். எனினும், சகல அரச அதிபர் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான மீள்குடியேற்ற திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்குமாறு வடக்கு செயலணியின் தலைவர் பா. உ. பசில் ராஜபக்ஷ, அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மேலதிகமாக ஆராயவென, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையில் அடுத்த வாரம் வவுனியாவில் கூட்டமொன்றை நடத்துவதெனவும் நேற்றைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் மூன்றாம் கட்டப் பணி விரைவில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தொடர்பாக அடுத்த வாரம் இறுதிக் கட்ட திட்ட அறிக்கையொன்றை வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் சமர்ப்பிக்கவுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply