புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்

புதிய இராணுவத் தளபதியாகத் தன்னைத் தேர்தெடுத்த ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். “முன்னாள் இராணுவத் தளபதி நாட்டுக்குப் பாரிய சேவையை ஆற்றியுள்ளார். அவர் மூன்று வருடக் காலப் பகுதியில் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைக்குப் பல ஆலோசனைகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியமை குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒன்றாகும்.

நான் வன்னி பிராந்தியத்தில் கட்டளையிடும் தளபதியாக இருந்த போது, பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கும் பணியில் நானும் சேர்ந்து கடமையாற்றினேன். இது எனக்கு பெருமை அளிக்கிறது” என்றும் அவர் கூறினார். கடந்த காலத்தில் நிலவிய யுத்தத்தில் அங்கவீனமடைந்த மற்றும் உயிரைத் தியாகம் செய்த படைவீரர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்கும் தான் தலைவணங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டின் இறைமையைக் காக்கவும் நாட்டின் பாதுகாப்பை பல வழிகளில் உறுதி செய்யவும் தான் அர்ப்பணிப்புடன் கடமையாற்ற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply