பிரபாகரனை அழிப்பதற்கு சில காலமே தேவையான போது பாதாளத்தை ஒழிக்க அவ்வளவு காலம் தேவைப்படாது : சரத் பொன்சேகா

புதிய பாதுகாப்பு படைத் தலைமை அதிகாரியாக பதவியேற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்செகாவினால் நிறைவேற்றப்பட்ட முதல் காரியம் சீனாவிடம் கோரப்பட்டிருந்த 20கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதக் கொள்வனவு நிராகரிக்கப்பட்டதாகும். வடக்கில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பெருமளவிலான படையினரை நியமித்துள்ளோம். இந்நடவடிக்கையினை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக இந்திய இராணுவத்திலிருந்து சுமார் 500படையினர் இலங்கை வரவுள்ளனர்.

ரீ.எம்.வீ.பி.கட்சி உறுப்பினர்களில் சுமார் 800 பேரை இராணுவத்தில் இணைத்துக்கொண்ட நாம் அவர்களில் சிலரக்கு இராணுவத்தின் உயரதிகாரிகள் பதவிகளையும் வழங்கியுள்ளோம். இதேவேளை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பை பன்மடங்காக அதிகரிப்பதற்காக ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு எமக்கு மிகவும் குறுகிய காலப்பகுதியே தேவைப்பட்டது. இவ்வாறானதொர நிலையில் பாதாள உலகக் கோஷ்டியினரை அழிப்பதற்கு அவ்வளவு காலமா தேவைப்படப் போகின்றது. புhதாள உலகக் கோஸடியினரை அழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரின் பங்கும் அடங்கும். இராணுவத்தின் பாதுகாப்ப பலனாய்வுப் பிரிவினர் அவர்கள் தொடர்பிலான தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

முப்படை மற்றும் பொலிஸ் சேவைகளுக்கான ஆட்சேர்பபு நடவடிக்கைகள், பயிற்சியளித்தல், தொடர்புகளைப் பேணுதல், மற்றும் ஆயுதங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் தமக்கு கையளிக்கப்பட்டு பதவியில் நிறைவெற்றப்படவுள்ள பிரதான பொறுப்புகளாகும். பாதுகாப்ப அமைச்சின் ஒரு பகுதியாகவே தாம் செயற்பட்டு வருவதாகவம் சரத் பொன்சேகா மேலும் கூறினார

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply