180 நாள் துரித அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த 80% மக்களை மீளக்குடியமர்த்த முடிவு: ஜனாதிபதி
முப்பது வருட காலம் வடக்கு மக்களுக்குக் கிட்டாத அபிவிருத்தியை மீளப் பெற்றுக்கொடுப்பதுடன் அரசாங்க த்தின் 180 நாள் துரித அபிவிருத்தித் திட்டம் மூலம் இடம் பெயர்ந்த 80 வீத மக்களை மீளக்குடியமர்த்தவும் நடவடி க்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஆயுதமேந்தியமைக்காக 13, 14, வயதுக்குட்பட்ட சிறுவர் களைத் தண்டிக்கும் அளவிற்கு நாம் குரூரமானவர்களல்ல. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் சேர்ப்பதே தமது நோக்கமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தற்போது நல ன்புரி முகாம்களிலிருந்து விடுவித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மிதிவெடிகள் அகற்றப்பட்டு விரைவாக இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்திய ஜனாதிபதி மற்றும் முப்படையினருக்கும் கெளரவமளிக் கும் விசேட நிகழ்வொன்று நேற்று மஹியங்கனை ரஜ மஹா விஹாரையில் நடைபெற்றது. அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா, சி. பி. ரத்நாய க்க உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர் வடி வேல் சுரேஷ், மாகாண முதல்வர்கள், அமைச்ச ர்கள், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை உயரதிகாரிகள், பாதுகாப்பமைச்சின் செய லாளர் கோதாபய ராஜபக்ஷ உட்பட முக்கிய ஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-
பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கிய ப்படுத்தியமையை தாய்நாட்டின் இரண்டாவது சுதந்திரம் என மக்கள் மகிழ்ச்சியாக கொண்டா டுகின்றனர். 1917ல் ஊவா வெல்லஸ்ஸவில் நமது முன்னோர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தை நாம் மறக்கவில்லை. வரலாற்றை நாம் மறந்துவிடவும் கூடாது. வடக்கில் தற்போது மூன்று இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களில் 40,000 பேர் சிறுவர்களாவர். அவர்கள் அனைவ ருக்கும் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்பை நாம் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
எமது பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல் கையில் அந்த சிறுவர்களிடம் துப்பாக்கிகளைக் கொடுத்து பயங்கரவாதிகள் யுத்தத்துக்கு அனுப் பினர். இதுபோன்ற மாபெரும் அநியாயங் களை அவர்கள் செய்தனர். நாமே அச்சிறுவர் களை மீட்டுள்ளோம்.
உலகில் இடம்பெயர்ந்தோர் வாழும் முகாம் களை நோக்குகையில் எமது முகாம்களில் சிற ந்த சூழ்நிலை நிலவுகிறது. அவர்களுக்கான சகல வசதிகளையும் பெற்றுக்கொடுக்க நாம் கடமை ப்பட்டுள்ளோம். அவர்களை முகாம்களில் தடு த்து வைக்கும் நோக்கம் எமக்கில்லை. விரை வாக அவர்களை மீளக் குடியமர்த்துவதே எமது எதிர்பார்ப்பு. தேவையான உட்கட்டமைப்பு வசதி களை ஏற்படுத்தி அவர்களை மீளக் குடிய மர்த்துவதே படையினரதும் அரசாங்கத்தினரதும் நோக்கமாகும்.
ஆயுதமேந்திய 13, 14 வயது சிறுவர்களுக்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்லவோ வழக்கு தொடரவோ எதிர்பார்க்கவில்லை. 60 வயதிற்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களையும் கூட நாம் விடுவித்துள்ளோம். ஊவா மாகாணத்தைப் பொறு த்தவரை நாட்டின் மிகவும் கஷ்டப்பிரதேசமா கவே கடந்த காலங்களில் காட்சியளித்தது.
நாம் நாட்டை ஐக்கியப்படுத்தும் அதே வேளை கஷ்டப் பிரதேசங்கள் என்ற பெய ரையே நாட்டின் அகராதியிலிருந்து நீக்கிவிட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கு சகலரதும் அர்ப்பணிப்பு மிகவும் அவசியமாகும். பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையில் ஊவா வெல்ல ஸ்ஸ மக்களின் பங்களிப்பு கணிசமானது. வட க்கு, கிழக்கு யுத்தத்தில் ஊவாவிலிருந்து சென்ற 2700ற்கு மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்து ள்ளனர்.
ஆனையிறவு முகாமை மீட்பதற்காக அன்று டோசருக்கு மேல் பாய்ந்து தமது உயிரைத் தியாகம் செய்த காமினி கூட ஊவா வெல்லஸ்ஸவில் பிறந்தவரே.
இன்று சிலர் படையினரின் வெற்றியைக் கொண் டாடுவது பற்றி பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பி வருகின்றனர். நாம் நடத்துவது களியா ட்டம் அல்ல. பயங்கரவாதத்தை வென்றெடுத்த படையினருக்கான கெளரவம் வழங்கும் நிகழ்வு இது. மஹியங்கனை பகுதி மக்கள் பயங்கரவா தத்தின் அச்சுறுத்தலுக்குள்ளானவர்கள். இன்னும் மூன்று வருட காலம் பயங்கரவாதம் தொடர்ந் திருந்தால் மஹியங்கனை பிரதேசம் புலிகளின் அரசாட்சிக்கு உட்பட்டிருப்பது உறுதி. அப்படி நிகழ்ந்திருந்தால் இனத்தின் மரபுரிமை சிதைக் கப்பட்டிருக்கும். இந்தப் பிரதேசத்தில் பல பகுதி கள் எல்லைக் கிராமங்களாகவிருந்தன. இன்று எல்லைக்கிராமங்கள் இல்லாதொழிக்கப்பட்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது- மக்கள் அதற்காக மகிழ்ச்சி கொண்டாடுவது தவறல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
படையினரை கெளரவிக்கும் இந்நிகழ்வில் தாய் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து மீட்ட தற்காக ஜனாதிபதிக்கும், முப்படைத் தளபதிக ளுக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப் புச் செயலாளருக்கும் ஊவா மாகாண மக்கள் விருது வழங்கி கெளரவித்தனர். அம்மக்களின் சார்பில் விருதுகளை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வழங்கியமை குறிப்பிடத் தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply