இடம்பெயர்ந்த மக்களின் துயரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது
இலங்கையில் சமாதானத்தை ஏற்ப டுத்தும் வல்லமையும் கருத்தீடு பாடும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்கு உண்டு என்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் கூறி யிருக்கின்றார். எகிப்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கு பற்றுவதற்காகச் சென்றிருந்த வேளை இரு தலைவர்களும் சந்தித்த போதே இந்தியப் பிரதமர் இக் கருத்தைத் தெரிவித்தார். நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்க ளில் மீளக் குடியமர்த்துதல், தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை நடை முறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சரியான முடிவெடுத்துச் செயற்படுவார் என்ற நம்பிக்கையையே இந் தியப் பிரதமர் மேற்கூறிய சந்திப்பில் வெளி ப்படுத்தியிருக்கின்றார்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு க்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்க முடியுமோ அதனிலும் குறையாத முக்கியத்துவம் இடம்பெயர்ந்த மக்கள் தத்தமது சொந்த இடங்களில் குடியமர்வதற்கு அளிக்கப்படல் வேண்டும். இலங்கை அரசாங்கம் இப்பணிக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுவதை தெரிந்ததாலேயே இந்தியப் பிரதமர் மேற் படி கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
இல ங்கையில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா வுக்கும் தார்மீகப் பொறுப்பு உண்டு. தமிழ் நாட்டு மக்களின் உணர்வலைகளுக்கு மதிப் பளிக்க வேண்டிய நடைமுறைத் தேவை இந்தியாவில் பதவிக்கு வரும் எந்த அரசாங் கத்துக்கும் உண்டு என்பதை உபகண்ட அரசி யலைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் விளங்கிக்கொள்வர்.
இதனாலேயே, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதிலும் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்து வதிலும் இந்தியா தனது அக்கறையை வெளி ப்படுத்துவதோடு உதவியும் புரிகின்றது.
இதே நேரம் இலங்கையிலுள்ள சில கட்சி கள் இவ்விரு விடயங்களையும் அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்த முயற்சிப்பது கவலையளிக்கும் விடயமாக உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமே இனப் பிரச்சினையையும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினையையும் அரசியலாக்க முயற்சிக்கும் கட்சிகள். இவ் விரு விடயங்களும் அரசியல் வேறுபாடுகளு க்கு அப்பாற்பட்டவை என்பதை எல்லா அர சியல் கட்சிகளும் புரிந்துகொள்வது தான் ஆரோக்கியமானது.
ஒற்றையாட்சியின் கீழேயே இனப் பிரச்சி னைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி இப்போது எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளி யாகியிருக்கின்றன. இந்த அடிப்படையி லான தீர்வு தமிழ் மக்களின் அபிலாஷையை பூர்த்தி செய்யக்கூடியதாகவோ முழுமையான அரசியல் தீர்வாகவோ இருக்காதென்பது ஒரு புறமிருக்க, இன்றைய நிலையில் இதுவே நடைமுறைச் சாத்தியமானது.
இந்த யதார்த் தத்தைப் புரிந்துகொண்டதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றையாட்சி நிலைப்பா ட்டை மேற்கொண்டதாகக் கட்சி வட்டாரங் கள் கூறுகின்றன. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் விடயத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி இதே அடிப்படையில் யதார் த்தத்தைப் புரிந்துகொண்டு கருத்துத் தெரி விப்பதே மேலானது.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக் கைக் காலத்தில் புலிகளால் புதைக்கப்பட்ட நிலவெடிகள் முழுமையாக இன்னும் அகற் றப்படவில்லை. இந்த நிலையில், இடம் பெயர்ந்தவர்களை அங்கு குடியமர்த்துவது அவர்களை ஆபத்துக்குள் தள்ளிவிடுவதாகவே அமையும். மேலும், எழுந்தமானத்துக்கு மக் களைக் குடியமர்த்திவிட்டுப் பொறுப்பு முடி ந்தது என இருப்பதற்கு மக்களின் நலனில் அக்கறையுள்ள அரசாங்கத்தினால் முடியாது. அவர்களுக்குத் தேவையான உட்கட்டமை ப்பு வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தாக வேண்டும். அரசாங்கம் இப்பணிகளுக்கு முன் னுரிமை அளித்துச் செயற்படுகின்றது.
படிப் படியாகச் சகல வசதிகளுடனும் மக்களை மீளக் குடியமர்த்தும் திட்டத்துடன் அரசாங் கம் செயற்படுகின்றது. அரசியல் கட்சிகள் இதில் அரசியல் லாபம் தேட முனையாது, அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படு வது தான் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கை கொடுப்பதாக இருக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply