ஹைதி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 304 ஆக உயர்வு
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் ஹைதியின் போர்ட்-ஆப்-பிரின்சில் இருந்து 118 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாகவும், இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஹைதி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 304 பேர் பலியாகி உள்ளனர்.
நிலநடுக்கத்தினால் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என கூறப்படுகிறது. மீட்பு பணியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தினை தொடர்ந்து, ஒரு மாதத்திற்கு அவசரகால நிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்து உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply