முகாம்களிலுள்ளவர்களை வெளிக்கொண்டுவரப் பணம்பெறும் அதிகாரிகள்

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் பணம்பெற்றுக்கொண்டு வெளியேற அனுமதிக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.செட்டிக்குளம் நலன்புரி நிலையத்திலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நலன்புரி நிலையங்களில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் பணம் பெற்றுக்கொண்டு சிலரை விடுவிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நலன்புரி நிலையங்களிலிருக்கும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களும் இவ்வாறு வெளியேறிவிடலாமென்ற அச்சம் பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் காணப்படுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயின் படுகொலைச் சந்தேகநபரும் நலன்புரி நிலையமொன்றிலிருந்து தப்பிக்க முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு பணம் பெற்றுக்கொண்டு முகாம்களிலிருப்பவர்களை வெளியேற அனுமதிக்கும் முயற்சிகளில் அரசாங்க அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் தொடர்புபட்டிருப்பதாக ஆங்கில ஊடகமான லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. ஒருவரை முகாமிலிருந்து விடுதலை செய்வதற்கு 10,000 ரூபாமுதல் 500,000 ரூபாவரை அறவிட்டிருப்பதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் முகாமிலிருந்த ஒருவருடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது சோதனைச் சாவடியொன்றில் கைதானதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply