இலங்கையில் முழு நேர முடக்கம் குறித்து ஆராய்வு

நாடு முழுவதும் தற்போது தினமும் இரவு 10.00 மணி தொடக்கம், அதிகாலை 04.00 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் சனி மற்றும் ஞாயிறு வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அரசாங்க தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ‘டெல்டா’ வைரஸ் பரவல் காரணமாக நாளாந்தம் 150 இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவாகிவரும் பின்னணியில் இவ்வாறு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதி நாட்களிலும் முழுநேர ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பிலேயே அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, வர்ததமானியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, , நேற்று (16) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லையென்றும் ஆனால் பதிவுத் திருமணங்களை பதிவாளர், மனமகன், மணமகள் அவர்களது பெற்றோர், சாட்சியாளர்களின் பங்களிப்புடன் மட்டும் நடத்த முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதத்தை விடவும் அதிகரிக்காத எண்ணிக்கையிலானோருக்கு ஒன்றுகூட முடியும் என்பதுடன், பொது இடங்களில் நடமாடுவதை இயன்றளவு தவிர்க்குமாறும் அரசாங்கம் பொதுமக்களை கோருவதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply