நாட்டை முடக்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதியே நாட்டை முடக்குமாறு எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சருக்கும் , சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் மற்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகத்திற்கும் அறிவித்துள்ளதாக அவர் தெரி வித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply