சுய முடக்கம் செய்து கொள்ளுமாறு சஜித் அணி கூட்டு அறிக்கை மூலம் நாட்டு மக்களிடம் கோரிக்கை

அரசாங்கம் தமது பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றலில் இருந்து விலகி இருப்பதால் நாட்டு மக்கள் தங்களை தாங்களே சுய முடக்கம் செய்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது கூட்டணி கட்சித் தலைவர்களுடன் இணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாரபில் அமீர் அலி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலில் நாட்டு மக்கள் தங்களை தாங்களே சுய முடக்கம் செய்து கொள்ளுமாறு கூட்டு அறிக்கையில் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருப்பதாகவும் பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பேற்றலில் இருந்து அரசாங்கம் விலகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வைரஸ் நிலை குறித்து தேசிய மற்றும் சர்வதேச சுகாதார அமைப்புகள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதற்கு செவிசாய்க்கவில்லை எனவும் நியூசிலாந்தில் ஒரே ஒரு டெல்டா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதன் பின் முழு நாட்டையும் முடக்க அந்நாட்டு பிரதமர் நடவடிக்கை எடுத்ததை ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்றை தமது அரசியலுக்காக பயன்படுத்தி வரும் அரசாங்கம் மக்களின் உயிர்களை கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளதெனவும் நாட்டு மக்களின் உயிர்களை கடவுளுக்கு பொறுப்பளிப்பதாக இருந்தால் அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் இல்லை என்பதே உண்மையான விடயம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் நாட்டு மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் சுய முடக்கம் செய்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply