கொரோனா தொற்றாளர்கள் ஈக்களை போல செத்து விழுவதாக கூறிய வைத்தியரை துரத்தும் CID
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படும் நபர்கள் ஈக்களைப் போல செத்து விழுவதாக முகநூலில் பதிவிட்ட அவிசாவளை வைத்தியசாலை வைத்தியர் நஜீத் இந்திக்கவிடம் CID பிரிவு அதிகாரி ஒருவர் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
அவிசாவளை வைத்தியசாலைக்கு வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இவ்வாறு வாக்குமூலம் பெற்றதாக வைத்தியர் இந்திக்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே CID என்று கூறிக் கொண்டு வைத்தியசாலைக்கு தன்னை தேடி வந்ததாக இந்திக்க முகநூலில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அவ்வாறு தமது CID பிரிவில் இருந்து எவரும் வரவில்லை எனவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸ் பரிசோதகர் தன்னிடம் கூறியதாக வைத்தியர் தெரிவித்தார்.
ஏற்கனவே தன்னை தேடி வந்த நபர்கள் பின்வழியாக வர முயற்சித்ததாகவும் அவர்கள் புலனாய்வு பிரிவினராக இருக்கக்கூடும் எனவும் தனது மனநிலையை சோதனை செய்ய வந்ததாக அவர்கள் கூறியிருந்ததாகவும் தெரிவித்த வைத்திய இந்திக்க, தான் ஒரு வைத்தியர் எனவும் தனது மனநிலையை பரிசோதனை செய்ய பொலிஸ் மற்றும் CID பிரிவிற்கு முடியாது எனவும் கருத்து வௌியிடும் தனது சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா வைரஸ் தொடர்பான உண்மை நிலைமைகளை வௌியிடும் வைத்தியர்கள் CID பிரிவினர் தேடிச் செல்வது நாட்டு மக்களிடையே வெறுப்புத் தன்மையை ஏற்படுத்தியுள்ளதை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply